ஊர்ந்து சென்ற நல்ல பாம்பு.. ஓட்டம் பிடித்த பொதுமக்கள்

திருவொற்றியூர் பகுதியில், ஊர்ந்து சென்ற நல்ல பாம்பை கண்டு கத்தி கூச்சலிட்டு ஓட்டம் பிடித்த பொது மக்களால் அங்கு சில நேரம் பரபரப்பு ஏற்பட்டன.

சென்னை, திருவொற்றியூர் பகுதியில், சக்திபுரம், முதல் தெருவில், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். மேலும் பொது மக்களும், ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடைகளுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் தர்ம ராஜ் வீட்டருகே, ஐந்தரை அடி நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றன. இதை பார்த்த பொது மக்கள் கத்தி கூச்சலிட்டு ஓட்டம் பிடித்த பொது மக்களால் அங்கு சில நேரம் பரபரப்பு ஏற்பட்டன. பின்னர் கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் அதிகாரி வாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள், பாம்பை லாவகமாக பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டன.