தனியார் பள்ளி விடுதியில் சோகம்.. கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாஸ்திரி அருள் பெமினா கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி விடுதியில் தங்கி வகுப்புகள் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

தான் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.