கொரோனா விதி மீறல்.. சட்டத்திற்கு புறம்பாக நீட் பயிற்சி வகுப்பு

அரக்கோணம் – திருத்தணி செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் எதிரில் நீட் பயிற்சி வகுப்பு செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசு கொரோனோ தொற்றுக்கு எதிராக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து நோய் தொற்று பரவாமல் இருக்க மாணவர்கள் ஆகியோர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதை மீறும் வகையில், அரக்கோணத்தில் தனியார் பயிற்சி மையம் மாணவர்களை ஒரே அறையில் வைத்து பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறது. மேலும் அதிக பணத்தினை பெற்றோர்களிடம் வசூலித்து வருகிறது.

அரசு அனுமதி பெறாமல் அரசு அனுமதி கொடுக்காமல் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் மீது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இது குறித்து விரிவான விசாரணை செய்ய வேண்டும் என அப்பகுதி அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.