கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து, 3 நாட்கள் விடுறை அறிவிக்கப்பட்டதால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆயிரக்கணக்கானோ திர்ண்டனர். அவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை தொடர்நந்து 3 நாட்களாக திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகமாவே காணப்படுகிறது. தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயின்ட் என அனைத்து இடங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் தலைகளாகவே தெரிகின்றன.

ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை சவாரி, சைக்கிள்- டூவீலர் ரைடிங் செய்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் குதூகலிக்கின்றனர்.

தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் விடுமுறைகள் வரவுள்ளதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், கொடைக்கானல் நகரின் முக்கிய சாலைகள், சந்திப்புகள், சுற்றுலா தலங்கள், நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.