சிக்னல் கிடைக்காத பிஎஸ்என்எல் நெட்வொர்க்… ஆன்லைன் மாணவர்கள் அவதி…

சிக்னல் கிடைக்காத பிஎஸ்என்எல் நெட்வொர்க்… ஆன்லைன் மாணவர்கள் அவதி…
Spread the love

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன்களில் முறையாக சிக்னல் கிடைக்காததால், ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோன ஊரடங்கு அமலுக்கு வந்தது. பின்னர், படிப்படியாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு விலக்கப்பட்டது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பபதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என சுகாதார துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையொட்டி, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் படிக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், பெற்றோர்கள், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து செல்போன் வாங்கி கொடுப்பதுடன், அவர்களுக்கு புதிய சிம்கார்டுகள் வாங்கி கொடுக்கின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான பெற்றோர்கள், அரசின் பிஎஸ்என்எல் சிம்கார்டுகளை வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், அந்த நெட்வொர்க், சரிவர கிடைப்பதில்லை. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தினமும் பள்ளிக்கு சென்று, காலை முதல் மாலை வரை படித்தாலே மாணவர்களின் மனத்தில் பாடங்கள் பதிவது கடினம். இந்தவேளையில், ஆன்லைன் வகுப்பில் பாடம் நடத்தியும், சிக்னல் கிடைக்காமல் உள்ளதால், அவர்களது கல்வி கேள்விக்குறியாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *