சாலையை சீமைக்க கோரி மறியல்… போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்…

சாலையை சீமைக்க கோரி மறியல்… போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்…
Spread the love

சென்னை தங்கசாலை தெருவில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தங்கசாலை தெரு, மணிகூண்டு முதல் பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை வரை சுமார் 5 கி.மீ. தூரம் கொண்டது. இந்த தெருவில் ஏராளமான உணவகங்கள், பேன்சி ஸ்டோர்கள், டீக்கடைகள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள், சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள் உள்பட அனைத்து வகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.

இதையொட்டி, தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றன. பல்வேறு தரப்பு மக்களும், பொருட்கள் வாங்க வருவது வழக்கம். இதனால், இந்த பகுதி எந்நேரமும் பரபரப்பாக காணப்படும்.

கடந்த 6 மாதத்துக்கு முன், தங்கசாலை தெருவில் ராமர் கோயில் அரசு அச்சகம் வரை சாலையில் ஏராளமான பள்ளங்கள் இருந்தன. இதனை சீரமைப்பததாக கூறி, மாநகராட்சி ஊழியர்கள், சாலை முழுவதும் பள்ளங்களை தோண்டி, பல்லாங்குழியாக மாற்றிவிட்டனர். இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து, பாஜக தலைமையில் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை தங்கசாலை தெரு, ராமர் கோயில் அருகே திரண்டனர். அங்கு சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பபகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. போலீசாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார், அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனாலும், போராட்டம் தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *