தமிழகத்தில் 2 கட்ட தேர்தலா? சத்தியபிரத சாகு விளக்கம்!!!

தமிழகத்தில் 2 கட்ட தேர்தலா? சத்தியபிரத சாகு விளக்கம்!!!
Spread the love

சென்னை : தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்.

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை. மேலும் வரும் 20ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம்,புதுவை ,அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்தந்த மாநிலங்களின் பண்டிகை தேதி மற்றும் பள்ளிகள் இயங்கும் நாட்களுக்கு ஏற்றவாறு தேர்தல் தேதிகளை வரையறுத்து வருகின்றனர்.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.இன்று செய்தியாளரை சந்தித்த சத்யபிரத சாகு கூறியதாவது. தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திட்டமிட்டப்படி இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *