அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வு: தமிழ் மொழி புறக்கணிப்பு:

அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வு: தமிழ் மொழி புறக்கணிப்பு:
Spread the love

அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கு மொழி பட்டியலுக்கு தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி : அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வுக்கு மொழி பட்டியலுக்கு தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. அஞ்சல்துறை அக்கவுண்டன்ட் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடைபெறும் தேர்வின் முதல்தாளில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கமளித்துள்ள தபால் துறை நிர்வாகம், “இரண்டாம் தாளில் தமிழ் மொழியில் 40 மதிப்பெண்கள் பெறாமல் யாரும் வேலைக்கு வர முடியாது என்றும், வடநாட்டவர்கள் யாரும் பணிக்கு வர முடியாது’ என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய தபால் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலையங்களில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, உதவியாளர், பன்முகத் திறன் ஊழியர் உள்பட பல்வேறு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தபால்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அஞ்சல்துறை முதன்மைப் பணிகளுக்கான முதல்தாள் எழுத்துத் தேர்வினை ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *