லடாக் எல்லையில் சிக்கிய சீன வீரர்..

லடாக் எல்லையில் சிக்கிய சீன வீரர்..
Spread the love

இந்திய எல்லையான லடாக் பகுதியில், அத்துமீறி நுழைந்த சீன வீரரை, இந்திய ராணுவம் சுட்டு கொன்றது.

கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து, இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.

போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனாலும், இந்திய – சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவுகிறது. இதையொட்டி, இந்திய ராணுவத்தின் சிறப்பு படையினரும், விமானப்படையின் சிறப்பு பிரிவினரும் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சீன ராணுவ வீரர், இந்திய எல்லையில் நுழைவதை கண்டனர். உடனே அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில், தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *