மோசமான வானிலையே இதற்கு காரணம்: இலங்கை கடற்படை

மோசமான வானிலையே இதற்கு காரணம்: இலங்கை கடற்படை
Spread the love

இலங்கை: 4 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதற்கு இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்ததாகவும், ரோந்து கப்பல் தமிழக படகுகள் மீது மோதியிருக்காது எனவும் இலங்கை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய ரோந்து கப்பல் மீது மோதிவிட்டு தமிழக மீனவர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்ததாக இலங்கை கடற்படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தப்பிச் செல்லும் போது படகு கடலில் விழுந்து மூழ்கியதாகவும் இலங்கை கடற்படை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி படகை மூழ்கடித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கைள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். மேலும் தற்போது இலங்கை கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த விளக்கம் தமிழக மீனவர்களை அவமதிக்கும் வகையில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *